இணைய இணைப்புக் கிடைக்குமுன் எமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று எமக்கே தெரியும். ஆனால் நாம் தேர்ந்தெடுத்திருக்கும் இன்டர்நெட் பிளான் அன் லிமிட்டட் என்பதால் அதற்குத் தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும். இப் பிரச்சினையை நீக்கி முழு இணைய வேகத்தையும் பெறும் வழிமுறை இதோ :
இணைய இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில் இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்யாது எமது கணனியில் ஒரு சிறு மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத் தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.
சாதாரணமாக அண்லிமிட்டட் இன்டர்நெட் (Unlimited Internet) இணைப்புத் தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக (Limited Speed) இருக்கும். பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவான கோப்புகளைத் தரவிறக்க முடியும். இதைத் தவிர்த்து நம் கணனியில் ஒரு சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் முழு இன்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
வின்டோஸ் எக்ஸ்பி (Windows Xp ) கணனி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும். முதலில் Start Button ஐ சொடுக்கி Run என்பதைத் தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும். Run வின்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும். அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவுக்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதைத் தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menuவில் Network என்பதைத் தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menuவில் QoS Packet Scheduler என்பதைச் சொடுக்க வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதைச் சொடுக்கி Enabled என்பதைத் தேர்ந்தெடுத்து அதற்கடியில் இருக்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானைச் சொடுக்கி சேமித்து வெளியே வர வேண்டியது தான். பின் கணனியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாகத் தெரியும்
No comments:
Post a Comment